441
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 75% முடிந்து விட்டதாகவும், அடுத்ததாக படக்குழு ஜார்ஜியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அடுத்து தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளது அனைவரும் அறிந்த விஷயம்.
தளபதி 66 படம் கூட தொடங்காதாக நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், தளபதி 67 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் அப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.