உலகளவில் வெளியாகும் புதிய படம்… ஆங்கில இயக்குனருடன் கைகோர்க்கும் சமந்தா!

by Column Editor

உலகளவில் வெளியாக இருக்கும் புதிய படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவைப் பிரிவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. எனவே சமந்தா அடுத்து சில காலம் கழித்து தான் சினிமாவில் மீண்டும் செலுத்துவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்து படங்களை அறிவித்து சினிமாவில் ஆக்டிவாக இருப்பதை காண்பித்துள்ளார்.

தமிழில் சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா உடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.

அதையடுத்து அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் தமிழில் நடிக்கவுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர் சார்பாக எஸ்ஆர் பிரபு இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது சமந்தா நடிப்பில் உலகளவில் வெளியாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறப்பான விற்பனை பெற்ற ஆங்கில நாவலான தி அரேஞ்மென்ட்ஸ் மேரேஜ் நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை பிலிப் ஜான் என்பவர் எழுதி இயக்குகிறார். இந்திய அளவில் ரசிகர்கள் மனம் மயக்கிய சமந்தா தற்போது உலகளவில் ரசிகர்களைக் கவரத் தயாராகி உள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Posts

Leave a Comment