878
பிக்பாஸ் 5வது சீசன் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி என 4 பேர் இதுவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.
இடையில் என்ன காரணம் தெரியவில்லை நமீதா மாரிமுத்து வெளியேறிவிட்டார், இந்த வாரம் யார் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என தெரியவில்லை.
தற்போது பிக்பாஸ் 15வது சீசனில் இருந்து ஒரு பிரபலம் வெளியேறியிருக்கிறார். Raqesh Bapat பிக்பாஸில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஒரு பிரபலம். இவருக்கு இருக்கும் கல் பிரச்சனையால் தற்போது பிக்பாஸில் இருந்து வெளியேறியிருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைவார் என கூறப்படுகிறது. ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தனை செய்கின்றனர்.