இந்த மனசுதான் சார் கடவுள்! கொட்டும் மழையில் பிக்பாஸ் நமீதா செய்த வேற லெவல் காரியம்!

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக திருநங்கையான நமீதா மாரிமுத்து போட்டியாளராக கலந்து கொண்டார். மாடலிங் துறையை சேர்ந்த இவர் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தார்.

இவர் பிக்பாஸ் கொடுத்த கதை சொல்லட்டுமா என்ற டாஸ்க்கில் தான் குடும்பத்திலும், சமூகத்திலும் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் ஆகியவற்றை கதறி அழுதவாறு பகிர்ந்து கொண்டார். அது அனைவரையும் வருத்தத்துடன் கண்கலங்க வைத்தது. அதனைத் தொடர்ந்து நமிதா சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இதற்கிடையில் தற்போது சென்னை முழுவதும் மழை வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், உணவின்றி தவித்த தெருநாய்களுக்கு அவர் உணவு சமைத்து கொட்டும் மழையில் உணவளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment