“நீ புடுங்கிறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்” – விருது வழங்கி அசிங்கப்படுத்திய பிக்பாஸ்

by Column Editor

போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் விருது வழங்கி கவுரவிக்கும் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பொம்மை டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வந்தனர். இந்த டாஸ்க் விளையாடும்போது போட்டியாளர்களிடையே பிரச்சனை ஏற்பட்டு சண்டைப்போட்டுக் கொண்டனர். இந்த சண்டையில் நிரூப், அக்ஷரா, அபினய், வருண் ஆகியோருடன் தொடர்ந்து சண்டை போட்ட காட்சிகள் அரங்கேறியது.இப்படி சண்டை காடாய் இருந்த பிக்பாஸ் வீடு, தற்போது குதூகலமாய் மாறி வருகிறது. அது குறித்த இரண்டாவது ப்ரோமாதான் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் உள்ள 13 போட்டியாளர்களுக்கும் பிக்பாஸ் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் எந்த போட்டியாளருக்கு எந்த விருது வழங்கப்படுகிறது என்பதை பிரியங்கா சொல்கிறார். பிக்பாஸ் வீட்டில் சிறந்து விளையாடிய போட்டியாளராக நிரூப் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதையடுத்து அக்ஷராவுக்கு அடுத்த விருது வழங்கப்படுகிறது. விருதை வாங்கிய அக்ஷரா, பிக்பாஸ் வீட்டில் கிடைத்த முதல் விருது இது என்கிறார். இதைத்தொடர்ந்து நீ புடுங்கிறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான் என்ற விருது ராஜூவுக்கு கொடுக்கப்படுகிறது. விருதுக்கு பிறகு பேசும் ராஜூ, இனி தேவையுள்ள ஆணிகள் புடுங்கப்படும் என்கிறார்.

Related Posts

Leave a Comment