முதன்முறையாக டிவியில் ஒளிபரப்பான டாக்டர் திரைப்படத்தின் TRP இவ்வளவு தானா?

by Column Editor

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடித்த திரைப்படம் டாக்டர். திரையரங்குகளில் மாஸாக ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

பல வசூல் சாதனை எல்லாம் டாக்டர் திரைப்படம் நடத்தியது, ரூ. 100 கோடிக்கு வசூலித்துவிட்டது என தயாரிப்பு குழுவே அறிவித்தார்கள். திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே தீபாவளி தின ஸ்பெஷலாக படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இத்திரைப்படம் TRP ரேட்டிங்கில் பெரிய சாதனை நிகழ்த்தும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் படத்தை 16.82 % பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தை 1.8 கோடி பேர் பார்த்தார்கள், ஆனால் டாக்டர் திரைப்படத்தை 1.3 கோடி பார்வையாளர்கள் மட்டுமே பார்த்துள்ளனர்.

Related Posts

Leave a Comment