கடுப்பான அண்ணாச்சி – பொம்மையை வைத்துக்கொண்ட ஓடாத இசைவாணி

by Column Editor

பொம்மையை வைத்துக்கொண்டு இசைவாணி ஓடாததால், இமான் அண்ணாச்சி கடுப்பாகி கேள்வி கேட்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 38வது நாளை எட்டியுள்ளது. ரசிகர்களுக்கு சுவாரஸ்சியத்தை கூட்ட போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற வித்தியாசமான டாஸ்க் ஒன்று நேற்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின்படி போட்டியாளர்களின் பெயர் எழுதப்பட்டிருக்கும் பொம்மைகளை, சக போட்டியாளர்கள் எடுத்துக்கொண்டு ஓடவேண்டும்.

அதன்படி நேற்றைய டாஸ்க்கில் முதல் போட்டியாளராக பிரியங்கா வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு தொடர்ந்து நடைபெற்ற வந்த டாஸ்க்கில் நிரூப் மற்றும் வருண் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்றைய எபிசோடு அதேபோன்றதொரு சண்டையுடனே ஆரம்பித்திருக்கிறது. இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இமான் அண்ணாச்சியின் பொம்மையை இசைவாணி எடுத்துக்கொண்டு ஓடவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதனால் இமான் இந்த டாஸ்க்கிலிருந்து வெளியேற்றப்படுவதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். இதனால் கடுப்பான அண்ணாச்சி, இசைவாணியிடம், நீ எதற்கு என் பொம்மையை வைத்துக்கொண்டு ஓடல என்றும், முதுகில் குத்திவிட்டாய் என்று சொல்கிறார். நான் முதுகில் குத்தவில்லை. நேரடியாகவே குத்திவிட்டேன் என்று இசைவாணி சொல்ல, இமான் அண்ணாச்சி கடுப்பாகும் ப்ரோமோதான் தற்போது வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment