ஹாலிவுட் பட போஸ்டரை காப்பி அடித்த சந்தானம் திரைப்படம்

by Column Editor

காமெடி நடிகராக கொடிகட்டி பறந்து, பின்னர் நடிகராக அவதாரம் எடுத்து படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் சந்தானம்.

கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மூலம் நடிகராக தனது புது இன்னிங்க்ஸை தொடங்கினார்.

அதன் பின்னும் தொடர்ச்சியாக நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் அவ்வப்போது நடிகராக சில படங்களிலும் நடித்து வந்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிக்கிலோனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்தநிலையில் சந்தானத்தின் அடுத்த படமான சபாபதி படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

ஆம், ரோல் மாடல்ஸ் என்னும் ஹாலிவுட் திரைப்படத்தின் போஸ்டரை அப்படியே காப்பி அடித்துள்ளது படக்குழு. இதனை ரசிகர்கள் இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்

Related Posts

Leave a Comment