பஸ் – பெட்ரோல் டேங்கர் மோதி 92 பேர் உடல் கருகி உயிரிழப்பு

by Lifestyle Editor

பெட்ரோல் டேங்கரும் பஸ்ஸும் மோதிக்கொண்ட விபத்தில் 92 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் சியாரா லியோன் தலைநகர் ப்ரீடவுன் நகரத்தில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்திருக்கிறது.

பெட்ரோல் டேங்கர் லாரியும் பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் டேங்கரில் இருந்து பெட்ரோல் வழிந்தோடி இருக்கிறது. இந்த பெட்ரோலை பிடிப்பதற்காக ஏராளமானோர் திரண்டு இருக்கிறார்கள். அப்போது திடீரென்று டேங்கர் வெடித்து சிதறி தீப்பற்றி எரிகிறது.

இந்த தீ அதிவேகமாக பரவி அங்கிருந்த கடைகளும் வீடுகளும் தீப்பற்றி எரிந்துள்ளன. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறி இருக்கிறது. இந்த விபத்தில் 92 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் ஏராளமான வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன. மீட்புப் பணிகள் தீவிர கதியில் நடந்து வருகின்றன.

ஸ்காட்லாந்தில் பருவநிலை நடக்கும் மாநாட்டில் பங்கேற்கும் சியரா லியோன் நாட்டு அதிபர், இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

Related Posts

Leave a Comment