191
நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்வதால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவை அதிகரித்து விலை உயரத் தொடங்கியுள்ளது. அதுவும் தீபாவளிப் பண்டிகை நெருங்கும் சமயத்தில் விலையேற்றம் இருப்பது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்று தக்காளி விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று (நவம்பர் 3) ஒரு கிலோ தக்காளி விலை 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. வெங்காயம் விலை 40 ரூபாயிலிருந்து 38 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, அவரைக்காய் விலை 40 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கேரட் 65 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி – ரூ.70