யுவராஜ் சிங் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!! படுகுஷியில் ரசிகர்கள்.!

by Column Editor
0 comment

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் 2011 உலக கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய வீரராக செயல்பட்டார். இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பின்னர் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து பிசிசிஐ-யிடம் அனுமதி பெற்று உலகம் முழுவதும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்றார். இந்தநிலையில் தற்போது யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப தயாராக வருவதாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்கள் தலைவிதியை கடவுள் தீர்மானிக்கிறார்.பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் பிப்ரவரியில் மீண்டும் களமிறங்குவேன். இந்த உணர்வுக்கு நிகர் எதுவும் இல்லை. உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து இந்திய அணிக்கு ஆதரவு கொடுங்கள், இது நம்முடைய அணி என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment