லண்டனில் கல்லறையில் இருந்து கிழித்து கொண்டு வெளியே வந்த விரல்கள்

by Column Editor

லண்டனில் நபர் ஒருவர் காட்டில் நடந்து செல்லும் போது கல்லறையில் இருந்து இறந்த உடலின் விரல்கள் வெளியே வருவதை போல இருப்பதை கண்டு பேரதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று கூற கேள்விப்பட்டிருக்கின்றோம். அது போல ஒரு சம்பவம் லண்டனில் உள்ள ஒரு நபருக்கு அரங்கேரியுள்ளது.காட்டில் நடந்து செல்லும் போது கல்லறையில் விரல்கள் இருப்பதை கண்டு நபர் ஒருவர் அதிந்து போயுள்ளார். பயத்தில் உறைந்து போன அந்த நபரால் தனது கால்களை நகர்த்த கூட முடியவில்லையாம்.

உண்மையில் கல்லறையில் விரல்கள் வந்ததா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு செய்ததில் தான் உண்மை வெளிவந்துள்ளது. உண்மையில், இறந்த மனிதனின் விரல்கள் என்று அவர் நினைத்தது விரல்கள் இல்லை. விரல்கள் போல் தோன்றும் பவள செடி.

பவள செடியின் கிளைகள் தரையில் இருந்து கிழித்து கொண்டு வெளியே வரும் என்பதால் பார்ப்பதற்கு மனித உடல்களின் விரல் போல் இருந்துள்ளது.

இதேவேளை, இந்த பவளப்பாறை இறந்த மனிதனின் விரல்கள் என்றும் அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

Related Posts

Leave a Comment