217
			
				            
							                    
							        
    ஹமாஸ் படையினரை முற்றாக ஒழிக்கும் விதமாக இஸ்ரேல் இராணுவம் காஸாவில் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதன் அடுத்த கட்டமாக சுமார் 14 இலட்சம் பலஸ்தீனர்கள் உள்ள ரபா நகரை முற்றுகையிட இஸ்ரேல் இராணும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தை இஸ்ரேல் இராணுவம் தாக்கல் செய்திருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது.
எனினும் பொதுமக்கள் எப்படி, எந்த பகுதிக்கு மாற்றப்படுவார்கள்? என்பது குறித்த எந்த விபரமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
