106
ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகின்றது. இன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,725 ஆகவும், சவரன், ரூ.53,800 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து 6,690 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 280 குறைந்து, ரூபாய் 53 ஆயிரத்து 520 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.90.70 ஆகவும், கிலோவிற்கு ரூ.90,700 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.