அட்சய திருதியை : ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை..

by Lifestyle Editor

அட்சய திருதியை நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது முறையாக உயர்ந்ததால் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சியடைந்தனர்.

தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிக ஏற்றத்தோடு காணப்படுகிறது. கடந்த மாதம் இதுவரை இல்லாத வகையில், தங்கம் விலை ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாயை கடந்தது.

இந்த நிலையில், நேற்று ரூ.6,615-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை, இன்று காலை ரூ.45 உயர்ந்து ரூ.6,660-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த சில மணி நேரத்தில் கிராமுக்கு மேலும் ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், ஒரே நாளில் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியையொட்டி காலை முதலே நகைக் கடைகளுக்கு பொதுமக்கள் செல்லும் நிலையில், தங்கம் விலை உயர்வால் ஏமாற்றமடைந்தனர்.

வெள்ளி விலை, கிராமுக்கு ஒரு ரூபாய் 30 காசுகள் விலை உயர்ந்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலையும் ஆயிரத்து 300 ரூபாய் உயர்ந்து ரூ.90 ஆயிரத்தை எட்டியது.

Related Posts

Leave a Comment