இந்திய பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் பேரணி!

by Editor News

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணி நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்துவரும் நிலையில், பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பா.ஜ., ஆதரவாளர்களான இந்திய வம்சாவளியினர் பா.ஜ., கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர்.

‘ரன் பார் மோடி’ என்ற பெயரில் இந்திய வம்சாவளியினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில், சுமார் 500 பேர் பங்கேற்றிருந்தனர்.

பேரணியில் ஈடுபட்டவர்கள், இந்திய தேசிய கொடி மற்றும் பா.ஜ., கொடிகளை ஏந்தியபடி பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவாறு இவ்வாறு பேரணியில் ஈடுபட்டனர்.

குறித்த பேரணியானது, லண்டனிலுள்ள புகழ்பெற்ற டவர் பிரிட்ஜ் அருகே முடிவுக்கு வந்தது.

இதேவேளை, இந்திய பிரதமர் மோடிக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆதரவாளர்கள் உள்ளனர்.

அதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் பெரும்பாலானோர் மோடிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment