பர்மிங்காமில் கால்பந்து இரசிகர்கள்- பொலிஸாருக்கிடையே மோதல்: 39 பேர் கைது!

by Lankan Editor

யூரோபா கான்ஃபெரன்ஸ் லீக் தொடரின், லீஜியா வார்ஸாவா மற்றும் ஆஸ்டன் வில்லா அணிகளுக்கிடையிலான போட்டியின் பின்னர், மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட மோதலின் போது, 39பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு பர்மிங்காமில் வில்லா பார்க் அருகே இரசிகர்களுடன் ஏற்பட்ட மோதலில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

அப்பகுதியின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் முயற்சித்த போதும், மோதலை கட்டுப்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்த அதிகாரிகளில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் தெரிவித்தனர், மேலும் இரண்டு பொலிஸ் குதிரைகள் மற்றும் இரண்டு பொலிஸ் நாய்களும் காயமடைந்ததாக கூறினார்.

பாதுகாப்பு பயத்தின் காரணமாக ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்திய போதும், இந்த மோதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment