உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை! 54 ஆயிரத்தையும் தாண்டியது!

by Editor News

ஆபணத் தங்கத்தின் விலை சில தினங்களில் அதிகரித்தும் பெரும்பாலான நாட்களில் குறைந்தும் வந்தது. ஆனால் இன்று சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,755ஆகவும், சவரன், ரூ.54,040 ஆகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, 6,770 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 120 அதிகரித்து, 54 ஆயிரத்து 160 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த மாதங்களில் 45 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது 50 ஆயிரத்தையும் கடந்து அதிகரித்து செல்வது பாமர மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

ஆனால் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.87.50 ஆகவும், கிலோவிற்கு ரூ.87,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

Related Posts

Leave a Comment