பிரித்தானிய இராணுவத்தின் குதிரைகளால் எழுந்த பதற்றம் !

by Lifestyle Editor

பிரித்தானியாவில், பக்கிங்ஹாம் அரண்மனைக்கருகே, இரத்தம் சிந்திக்கொண்டு ஓட்டம்பிடித்த இராணுவ குதிரைகளினால் அங்கு பதற்றமான நிலை உருவானது.

வெஸ்ட் எண்டிற்கும் இடையில் உள்ள ஆல்ட்விச் அருகே கடந்த 24 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெல்கிரேவியா பகுதியில் குதிரைப்படையை சேர்ந்த 7 குதிரைகளுடன் 6 இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அப்போது அப்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் கொன்கிரீட்டை கொட்டியுள்ளனர். இது குதிரைகளை அச்சமூட்டியுள்ளதாக கருதப்படுகின்றது.

இதனையடுத்து, 4 வீரர்களை கீழே தள்ளியுள்ள 5 குதிரைகள் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன், வாகனங்களில் மோதி, பலருக்கும் காயம் ஏற்பட காரணமாகவும் அமைந்துள்ளது.

ஐந்து குதிரைகளில் 2 குதிரைகள் சுமார் 8 கிமீ தூரத்துக்கு லண்டன் வீதிகளில் ஓடியதாக பிரித்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
கட்டுமான தளத்தில் எழுந்த இரைச்சலே, குதிரைகள் தறிகெட்டு ஓட வைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

லண்டன் வீதியில், வெள்ளை மற்றும் கறுப்பு நிறக் குதிரைகள் ஓடிக்கொண்டிருந்தன.

இதில் ஒரு குதிரை இரத்தம் வடிந்த நிலையில் ஒடியதாக கூறப்படுகின்றது.

அக்குதிரை, நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பஸ்ஸுடன் மோதி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கட்டுப்பாடின்றி ஓடிய குதிரைகளினால் குறைந்தது 4 பேர் வரை காயமடைந்துள்ளதாக பிரித்தானிய இராணுவம் தெரிவித்துள்ளதுள்ளது.

Related Posts

Leave a Comment