இரட்டை கர்ப்பம் சுமக்கும் பெண்களுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள்..!

by Lifestyle Editor

பொதுவாக கர்ப்பத்தில் இரும்புச்சத்து குறைபாடு என்பது பொதுவானது. அதிலும் இரட்டை கர்ப்பம் பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாடுடன் இரத்த சோகை அபாயத்தை கொண்டிருக்கலாம். இரும்புச்சத்து உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. கர்ப்பிணிக்கு அதிக இரத்தம் தேவைப்படும் நிலையில் இரும்புச்சத்து குறைபாடு தாய்வழிக்கு இரத்த சோகையை உண்டாக்குகிறது. இதன் தீவிர குறைபாடு ஆக்ஸிஜன் அளவை குறைக்கலாம். குறிப்பாக கர்ப்பிணியின் உடல் உறுப்புகள் மற்றும் வளரும் குழந்தைகள்.

தினசரி எவ்வளவு தேவை

முதல் மூன்று மாதங்களில் தினமும் 30 மில்லிகிராம் இரும்புச்சத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் தினமும் 60 கிராம் இரும்புச்சத்து தேவைப்படும். மகப்பேறுக்கு முந்தைய வைட்டமின்களுடன் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்து வர வேண்டும்.

இரட்டை கர்ப்பம் இருக்கும் போது ஃபோலேட் உணவுகள்​

ஃபோலேட் உணவுகள் ஃபோலிக் அமில என்றும் அழைக்கப்படுகிறது. கருவின் மூளை அல்லது முதுகு தண்டுவடத்தின் பிறப்பு குறைபாடுகள், ஸ்பைனா பிஃபிடா போன்ற ஆபத்தை குறைக்க இவை உதவுகிறது. குழந்தையின் நரம்புக்குழாய் குறைபாடுகளை தடுக்க இந்த வைட்டமின் பி ஃபோலிக் அமிலம் முக்கியமானது.

தினசரி எவ்வளவு தேவை

மகப்பேறுக்கு முந்தைய மல்டி வைட்டமின்களில் இவை இணைந்திருக்கும் என்பதால் சரியான அளவு கணிக்க மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. தினசரி அளவில் 400 முதல் 600 தினசரி மில்லிகிராம் மேல் தேவைப்படலாம்.

​இரட்டை கர்ப்பம் இருக்கும் போது கால்சியம்​

தேவை இன்னும் இரட்டிப்பாக இருக்கும். மருத்துவரை அணுகினால் கால்சியம் சப்ளிமெண்ட் மற்றும் கால்சியம் அதிகரிக்க உதவும் உணவு பொருள்களை பரிந்துரைப்பார்.

தினசரி எவ்வளவு தேவை

நாள் ஒன்றுக்கு 2000 – 2500 மி.கி வரை இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 12 வாரத்துக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 250 மிகி கூடுதலாக எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஊட்டச்சத்துக்கான அதிக தேவை கர்ப்பகாலத்தில் கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.

இரட்டை கர்ப்பம் இருக்கும் போது புரதம்​

புரதம் கரு வளர்ச்சிக்கும் தாயின் இரத்த அளவு விரிவாக்கத்துக்கும் அவசியமான ஒன்று. இது திசு உற்பத்திக்கான கட்டுமான தொழில்களில் ஒன்று. மெலிதான புரதங்கள் சேர்ப்பது ப்ரீக்ளாம்ப்சியா கர்ப்பகால நீரிழிவு மற்றும் குறைப்பிரசவம் ஆகியவற்றை தடுக்க உதவும்.

தினசரி எவ்வளவு தேவை

நாள் ஒன்றுக்கு 175-200 கிராம் வரை புரதம் தேவைப்படலாம். உணவு மூலங்களிலிருந்து வேண்டிய புரதத்தை பெற முடியும் என்றாலும் அவை குறைபாடுடன் குறைவாக இருந்தால் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் சப்ளிமெண்ட் எடுத்துகொள்ளலாம். குறைந்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் குறைந்த செயற்கை இனிப்பு இருப்பதை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் எடுத்துகொள்ள வேண்டிய புரத அளவை மருத்துவரிடம் கேட்டு சேர்க்கலாம்.

வைட்டமின் சி ஆரோக்கியமான நோயெதிர்ப்புக்கு அவசியமான ஒன்று. எலும்புகள் வலுவாக்கவும் தசைகளை வலுவாக்கவும் இவை உதவுகிறது. வைட்டமின் சி தினசரி உணவின் மூலமே பூர்த்தி செய்து கொள்ளலாம்.

தினசரி எவ்வளவு தேவை

மகப்பேறு முந்தைய வைட்டமின் எடுத்துகொள்பவர்கள் சரியான அளவுக்கு மருத்துவரை அணுகுவது அவசியம்.கர்ப்பத்தின் 12 வாரத்துக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 50 மிகி வரை எடுத்துகொள்ள மருத்துவ நிறுவனம் பரிந்துரைக்கிறது.

​இரட்டை கர்ப்பம் இருக்கும் போது வைட்டமின் டி​
​சிக்கு வைட்டமின் டி கால்சியம் உடன் செயல்படுகிறது. சருமம் மற்றும் கண் பார்வைக்கு வைட்டமின் டி அவசியம். கர்ப்பமாக இல்லாத போதே நாள் ஒன்றுக்கு 600 சர்வதேச அளவிலான வைட்டமின் டி தேவை.

தினசரி எவ்வளவு தேவை

1000 முதல் 2000 அலகுகள் வரை தேவை. கால்சியம் உடலில் நன்கு உறிஞ்சுவதற்கும் கருவின் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின் டி தேவை. சூரிய ஒளியில் போதுமான அளவு வைட்டமின் டி கிடைத்துவிடும். வைட்டமின் டி நிறைந்த உணவுகளும் அவசியம்.

Related Posts

Leave a Comment