கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான தகவல்

by Lifestyle Editor

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு முன்னரே முடிந்த நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வந்தன.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான இறுதி தேர்வினை முன்னரே நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருந்த நிலையில் 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நேற்று முடிவடைந்தன. ஒன்று மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 6-ம் தேதியே விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

நேற்றுடன், அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவுற்ற நிலையில், இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4 தேர்தல் முடிவு, வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தனியார் பள்ளிகளில் 1-9ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் அதிகரித்து வருவதால் மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை மேலும் ஒருவாரம் விடுமுறையை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment