பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு நெருக்கடி : விசா ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு!

by Lifestyle Editor

அமெரிக்காவில் வசித்துவரும் பிரித்தானிய இளவரசர் ஹரியின் விசா விண்ணப்பம், நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விசா தொடர்பான தமது ஆவணங்கள் எதுவும் பொதுவெளியில் வெளியிடுவதை தடுக்கும் நோக்கில் பிரித்தானிய இளவரசர் ஹரி போராடி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இளவரசர் ஹரி தனது Spare புத்தகத்தில், magic mushrooms உட்பட போதைப் பொருட்களை தாம் பயன்படுத்தியுள்ளதாக பதிவு செய்திருந்தார்.

இந் நிலையிலேயே அமெரிக்க சமூக ஆர்வலர் ஒருவர் இளவரசர் ஹரிக்கு விசா அனுமதித்துள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அத்துடன், ஹரி தமது விசா விண்ணப்பத்தில், போதைப்பொருள் பழக்கம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளாரா என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, ஹரி தமது போதைப்பொருள் பழக்கம் தொடர்பில் பொய் கூறியிருந்தால், அது அமெரிக்க பெடரல் சட்டத்தை மீறும் செயல் எனவும், இதனால் அவர் தமது குடிபெயர்தல் அந்தஸ்தை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி ஜோ பைடனின் அரசு தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தரவுக்கமைய தாம் யாரென உறுதி அளித்துள்ளதுடன், ஹரியின் நினைவுக் குறிப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை ஆவணமாக கருத முடியாது எனவும் அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

மேலும், ஹரியின் தனிப்பட்ட ஆவணங்களை பொதுவெளியில் வெளியிடுவது என்பது ஹரியின் தனியுரிமைக்கு எதிரான அத்துமீறல் என்றே அரசு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், ஹரியின் விசா ஆவணங்களை ஒப்படைக்க நீதிபதி கோரியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment