முருங்கைக்காய் சாம்பார்…

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 1 கப்

முருங்கைக்காய் – 1

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 1

கெட்டியான புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

மசாலா அரைக்க தேவையானவை :

நல்லெண்ணெய் – தேவையான அளவு

துருவிய தேங்காய் – 1/4 கப்

கொத்தமல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் – 4

சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் – 1/4 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள் – சிறிதளவு

தாளிக்க தேவையானவை :

நல்லெண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை நன்றாக அலசி 15 முதல் 20 நிமிடம் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து துவரம் பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து முருங்கைக்காய், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்களுக்கு வேகவைத்து கொள்ளுங்கள்.

காய்கறிகள் நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து கொள்ளவும்.

பின்னர் மற்றொரு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கொத்தமல்லி விதை, வெந்தயம், வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

வறுத்த அனைத்தும் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு காய்கறி வேக வைத்த நீரை சிறிதளவு ஊற்றி நன்கு மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

தற்போது வேகவைத்த காய்கறிகள் உள்ள கடாயை அடுப்பில் வைத்து அதில் அரைத்த மசாலாவை போட்டு நன்கு கலந்துவிட்டு கொள்ளுங்கள்.

அடுத்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதில் வேக வைத்த துவரம் பருப்பு மற்றும் திக்கான புளி கரைசலை சேர்த்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

மற்றொரு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு கொள்ளவும்.

கடுகு வெடித்ததும் காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொதிக்கும் சாம்பாரில் போட்டு 5 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

இறுதியாக கொதிக்கும் சாம்பாரில் சிறிதளவு நெய் ஊற்றி இறக்கினால் சுவையான கோயம்புத்தூர் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட ரெடி.

Related Posts

Leave a Comment