விண்ணில் சீறிப்பாய்ந்த உலகின் மிகப்பெரிய ரொக்கெட்..

by Lifestyle Editor

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” என்ற ரொக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனமனானது, உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமானது.

ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” எனப்படும் உலகின் மிகப்பெரிய ரொக்கெட்டானது, பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்டார்ஷிப் ரொக்கெட் 394-அடி (120-மீற்றர்) உயரத்துடன் 33 என்ஜின்களை கொண்டுள்ளது.

குறித்த ரொக்கெட் தெற்கு டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.

ஏற்கனவே இரு முறை முயற்சி தோல்வியைடைந்ததால் மூன்றாவது முறையாக விண்ணில் செலுத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment