தினமும் ஒரு கப் டீ குடித்தால் கூட உடல் எடை அதிகரிக்குமா..?

by Lifestyle Editor

நடந்த கொடூரம்
அதிகமாக டீ குடித்தால் சருமத்தில் இத்தனை பிரச்சனைகளை உண்டாக்குமா..?
டீ அதிகமாக குடித்தால் சருமத்தில் இந்த பாதிப்புகள் ஏற்படுமாம்..!
உங்கள் மெட்டபாலிசம் சரியாக வேலை செய்யவில்லை என்பதை உணர்த்தும் அறிகுறி
உலகில் எத்தனையோ பானங்கள் இருக்கலாம். ஆனால் டீ போல் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பானம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதே உண்மை. இதன் சுவைக்காகவும், நறுமணத்திற்காகவும் பல நூற்றாண்டுகளாக உலக மக்கள் அனைவராலும் விரும்பி பருகப்படுகிறது. எனினும் இந்த டீ-யை தினமும் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்குமா என்ற கேள்வி தற்போது பலருக்கும் எழுந்துள்ளது.

இதுகுறித்து சோசியல் மீடியாவிலும் சில விவாதங்களை பார்க்க முடிந்தது. இந்நிலையில் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லீமா மகாஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தன் பங்கிற்கு சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

ஒரு கப் டீ-யில் தோராயமாக 33-36 கலோரிகள் உள்ளது. இது பாலில் உள்ள கொழுப்புச் சத்தை பொறுத்து மாறுபடும். க்ரீம் பாலிற்குப் பதிலாக கொழுப்பு நீக்கிய பால் பயன்படுத்தினால் கலோரியின் அளவு பாதியாக குறையும் என லீனா விளக்கம் அளிக்கிறார்.

ஆனால் பலரும் டீயில் அதிகளவு சர்க்கரை சேர்த்து குடிக்கிறார்கள். இது உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது. ஒரு டீ ஸ்பூன் சர்க்கரையில் 19 கலோரிகள் உள்ளது. இதை டீயில் சேர்க்கும் போது, அது 48 கலோரிகளாக அதிகரிக்கிறது. நீங்கள் சர்க்கரை அதிகமாக சேர்க்க, சேர்க்க கலோரிகளின் அளவும் அதிகரிக்கும் என்பதை மறவாதீர்கள். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 கிராம் சர்க்கரைக்கு மேல் சேர்க்காதீர்கள்.

பெரும்பாலான இந்தியர்கள் டீ குடிக்கும் போது கூடவே பிஸ்கட், ரஸ்க், பஜ்ஜி, மிக்சர், சமோசா போன்ற கார்போஹைடரேட் நிறைந்த தின்பண்டங்களை சாப்பிடுகிறார்கள். 100கிராம் ரஸ்கில் 445 கலோரிகள் உள்ளது. 100 கிராம் மிச்சரில் 500-க்கும் அதிகமான கலோரிகள் உள்ளது. இதனால் தினமும் டீ குடிப்பதால் ஒட்டுமொத்த உடல் நலனில் பாதிப்பு ஏற்படுவதோடு ஊட்டச்சத்தின் சமநிலை மாற்றமடைகின்றன. டீயோடு நாம் சேர்த்து சாப்பிடும் உணவுகளில் கலோரிகள் அதிகமாக இருப்பதோடு சர்க்கரை, டிரான்ஸ் கொழுப்பு, பாமாயில் ஆகியவையும் இருக்கின்றன.

எதுவாக இருந்தாலும் என்னால் டீ குடிக்காமல் இருக்க முடியாது என சொல்பவர்கள், கீழ்காணும் முறையில் டீ குடிப்பது ஓரளவிற்கு பயன் தரும்.

டீ குடித்தால் எடை அதிகரிக்குமோ எனப் பயமின்றி குடிக்க வேண்டுமென்றால், எந்த தின்பண்டங்களையும் டீ குடிக்கும் போது சாப்பிடக் கூடாது. அதேப்போல் குறைவான சர்க்கரை மட்டுமே டீயில் சேர்க்க வேண்டும்.

உணவருந்தும் போது கூடவே டீயும் குடிக்காதீர்கள்.

ஸ்னாக்ஸ் அல்லது நட்ஸ் சாப்பிட்டால், அதன்பிறகு 40 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் கழித்து டீ குடியுங்கள்.

செரிமானப் பிரச்சனை, தூக்க கோளாறு போன்றவை இருந்தால் இரவு படுப்பதற்கு முன் டீ பருகாதீர்கள்.
வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிர்க்கவும்.

டீ அல்லது கஃபி குடிப்பதாக இருந்தால், அதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே ஒரு க்ளாஸ் தண்ணீர் பருகுங்கள். இது ஆசிட் அளவை குறைத்து செரிமானத் தொல்லையை போக்கும்.

Related Posts

Leave a Comment