செக்ஸ் சிறக்க ஆறு அற்புத குறிப்புகள்…

by Lifestyle Editor

வெளிப்படையாய் இருங்கள்:
உங்கள் உடல் மற்றும் பாலுணர்வை குறித்து உங்களது துணையுடன் வெளிப்படையாக பேசுங்கள், விவாதியுங்கள். இது நிச்சயமாக உங்களின் உடல் அங்கங்கள், அது மீதான பார்வைகளை குறித்த தெளிவை ஏற்படுத்தும். நீங்கள் படுக்கையில் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருக்க விரும்பினால், வெவ்வேறு பொஷிஷன்கள், செக்ஸ் டாய்ஸ்கள், ரோல் பிளே போன்று ஏதாவது புதிதாக முயன்று பார்க்க வேண்டும்.

அந்தரங்கப் பேச்சுகள்:
உங்களது உடலிலேயே மிகவும் செக்ஸியான உறுப்பு எதுவென்றால் அது மூளைதான். அங்கிருந்துதான் உங்களின் பாலியல் ஆசைகள் தோன்றுகின்றன. உங்கள் துணையுடன் சிறிது ஆபாசமாக பேசுதலும், பாலியல் நகைச்சுவை குறித்து பேசுவதும் உங்களை கிளர்ச்சியடைய செய்யும்.

ஏன் வேண்டும் ஃபோர் பிளே…?:
செக்ஸ் என்பது படிப்படியாக செல்ல வேண்டிய ஒரு உல்லாச பயணம். நேரிடியாக உடலுறவுக்கு செல்லக்கூடாது. அதற்கு முன் நிதானமும், தெளிவும் வேண்டும். இதனாலேயே, செக்ஸ்-க்கு முன்னதாக சிறிது சேட்டைகள் (ஃபோர் பிளே) முக்கியத்துவம் பெறுகின்றன. ஃபோர் பிளே ஜோடிகள் இருவரையும் ஒரே புள்ளியில் பயணிக்க செய்யும்.

பிடிக்காததையும் செய்யுங்கள்:
ஜோடிகளுக்குள் பொருந்தாத செக்ஸ் முறைகளும், செயல்பாடுகளும் இருப்பது இயல்பே. ஒருவருக்கு ஒருமாதிரியான எண்ணம், ஆசை இருக்கும். மற்றொருவருக்கு அது பிடிக்காமல் போகலாம். ஆனால், உங்கள் இணையரின் ஆசையை தடுக்க நினைக்காமல் சமரசம் செய்ய முயற்சியுங்கள். பேசுங்கள், முடிவெடுங்கள். இருவரின் ஆசைகளும் சம அளவில் பூர்த்தியாக வேண்டும்.

புகைப்பிடிக்காதீர்:
புகைபிடித்தல் ரத்தகுழாய் நோய்களுக்கு இட்டுச்செல்லுக்கூடியது. குறிப்பாக புகைப்பிடிப்பது ஆண், பெண் பிறப்புறுப்புகள் மற்றும் அவற்றின் திசுக்களுக்கான ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. அதிகமாக புகைபிடிக்கும் பெண்கள், மற்ற பெண்களை விட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாதவிடாய் நிறுத்தத்தை சந்திக்கிறார்கள் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

எப்படி உடற்பயிற்சி எடுப்பது..?:
ஆண், பெண் இருவரும் தங்கள் இடுப்பு பகுதி தசைகளை உடற்பயிற்சி மூலம் மேம்படுத்துவதன் மூலம் பாலியல் திறனை அதிகரிக்க முடியும். உதாரணத்திற்கு, நீங்கள் சிறுநீர் கழிக்க தொடங்கிய பின் 2 அல்லது 3 வினாடிகளில் நிறுத்தி விட வேண்டும். பின்னர் அதே இடைவெளியில் நிறுத்தி நிறுத்தி கழிக்க வேண்டும். அப்படி ஒருநாளைக்கு 5 முறை வரை பயிற்சியை செய்தால் மிகுந்த பயனளிக்கும். குறிப்பாக உடலுறவின்போது விந்தணுக்கள் விரைவாக வெளியேறுவதை கட்டுப்படுத்தலாம்.

Related Posts

Leave a Comment