விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதுகாக்க

by Lankan Editor

உலகில் பல்வேறு சுகாதார பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. அதில், பெரும்பலான ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, முன்கூட்டிய விந்துதள்ளல், விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கம் குறைவது போன்ற பல இனப்பெருக்க பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இந்தியா இந்த ஆண்டு 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது. ஆனால் மாற்று கருவுறுதல் விகிதம் ஏற்கனவே 2.1 க்கு கீழே குறைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்காண்டிநேவிய, ஜப்பான், தென் கொரியா, சீனா முதலிய பல நாடுகள் ஏற்கனவே ஆபத்தான குறைந்த பிறப்பு விகித பிரச்சனையை எதிர்கொள்கின்றன.

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருவது கவலைக்குரியது. அதேநேரம் டெஸ்டிகுலர் புற்றுநோய் போன்ற சில இனப்பெருக்க கோளாறுகளும் அதிகரித்து வருகின்றன. மலட்டுத்தன்மை மற்றும் இனப்பெருக்க பிரச்சனைகள் அதிகரித்து வரும் சுழலில், ஆண்களின் ஆரோக்கியத்தைப் பற்றி அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஆண்கள் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றி பேசுவதில்லை ஆண்கள் அதிக கொழுப்பு, சர்க்கரை நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் தங்களது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பற்றி யாரிடமும் பேசுவதில்லை. விறைப்புத்தன்மை அல்லது முன்கூட்டிய விந்துதள்ளல் போன்ற பிரச்சினைகளை பற்றி மற்றவர்களிடம் கூறினால், தங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்று பயப்படுகிறார்கள்.

இது பல தம்பதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. ஆனால், விழிப்புணர்வுடனும் நம்பிக்கையுடனும், இந்த பிரச்சனை மருத்துவரிடம் கொண்டு வரப்பட்டால், இந்த பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வுகளை காணலாம். இதற்கு பெரும்பாலும் மருந்துகள் தேவைப்படாது மற்றும் நல்ல ஆலோசனையின் மூலம் சமாளிக்க முடியும்.

ஒருவரின் இனப்பெருக்க வாழ்க்கையில் உகந்த நல்வாழ்வை அடைவதில் நீண்ட தூரம் செல்லக்கூடிய சில செய்ய வேண்டிய விஷயங்கள் மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். உடல் பருமன் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை அதிக எடையுடன் இருப்பது உடலின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும், இது டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும்.

இன்றைய நவீனஉலகில் உட்கார்ந்த வாழ்க்கை முறை அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியத்தை விட வசதிக்கு முன்னுரிமை அளிப்பதை எளிதாக்குகிறது. தினமும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது மற்றும் சைக்கிள் ஓட்டுதல் முதல் நீச்சல் வரை எந்தவொரு உடற்பயிற்சியையும் குறைந்தது 30 நிமிடங்களாவது சேர்த்துக்கொள்வது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவும், விந்தணு தரத்தை மேம்படுத்தவும் முடியும்.

வெளிப்புற நச்சுகள் பிளாஸ்டிக்கின் வருடாந்திர உலகளாவிய உற்பத்தி 70களில் இருந்து 50 மில்லியனிலிருந்து 300 மில்லியன் டன்களாக வளர்ந்துள்ளது. பல பிளாஸ்டிக்குகளில் நாளமில்லாச் சுரப்பியை சீர்குலைக்கும் இரசாயனங்கள் (EDCs) உள்ளன. எ.கா: Phthalates, Bisphenols, EDCs ஆகியவை அன்றாடப் பொருட்களில் காணப்படுகின்றன.

பிளாஸ்டிக் பாட்டில்கள் உணவு சேமிப்பு கொள்கலன்கள் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் அறை புத்துணர்ச்சி பொருட்கள் பூச்சிக்கொல்லிகள் இரசாயனங்களின் வெளிப்பாடு வளர்சிதை மாற்றம், பருவமடைதல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தம் மற்றும் மன ஆரோக்கியம் இன்றைய நாளில் பெரும்பலான மக்கள் மன அழுத்த பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறார்கள். ஒவ்வொருவரின் பைகளிலும் ஃபோன்கள், சலசலக்கும் வாட்ச்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள நிஜ உலகத்தை அமைதிப்படுத்தும் ஹெட்ஃபோன்கள் உள்ளன.

மன அழுத்தம் அல்லது பதட்டம் கருவுறுதலில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது மற்றும் பாலியல் திருப்தியின் உணர்வைக் குறைக்கிறது. பணிச்சூழலை மேம்படுத்துதல், வழக்கமான தியானம், தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்துதல், வழக்கமான உடற்பயிற்சி, நல்ல உணவு மற்றும் தூங்கும் பழக்கம் ஆகியவற்றின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

எலக்ட்ரானிக் கேஜெட்களின் பயன்பாடுகளை குறைக்க வேண்டும். தினமும் இயற்கையான இடங்களில் அரை மணி நேரம் செலவிடுங்கள். இது மனதிற்கு அமைதியை தரும். உணவுமுறை ஜங்க்புட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீண்ட காலத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது உடலில் உள்ள ஹார்மோன் அளவைத் தடுக்கிறது. முட்டை, பெர்ரி, அக்ரூட் பருப்புகள், பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஊட்டச்சத்து உணவு, வலுவான இனப்பெருக்க ஆரோக்கியத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும்.

ஆல்கஹால், புகையிலை மற்றும் புகைபிடித்தல் போன்ற பொருட்களின் அதிகரித்த உட்கொள்ளல் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சுகாதாரம் ஒவ்வொரு ஆண்களும் தங்கள் பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கழிவறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைக் கழுவுதல், பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்திருப்பது, சுத்தமான மற்றும் சுவாசிக்கக்கூடிய உள்ளாடைகளை அணிவது போன்ற தனிப்பட்ட சுகாதாரம் அவசியம்.

இது உங்கள் விந்தணுக்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் தொற்றுகள் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (எச்ஐவி), சிபிலிஸ், ஹெபடைடிஸ் பி, கிளமிடியா, கோனோரியா, ஹெர்பெஸ் மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்தொற்றுகளைப் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். காண்டம் அணிதல், பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவது அல்லது மருத்துவ உதவி போன்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சமூக மற்றும் பொருளாதார காரணிகள் பல தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை விட தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை முன்னிறுத்தி, கருத்தரிப்பை 30 வயதிற்கு பிறகு ஒத்திவைக்கின்றனர். ஆண்களுக்கு கருத்தரிப்பதற்கான உகந்த வயது 30 வயதுக்குக் குறைவானதாகும். இந்த வயதிற்கு அப்பால், விந்தணுக்களின் தரம் உட்பட இனப்பெருக்க ஆரோக்கியம் குறைகிறது.

இது தம்பதிகளின் கருத்தரிப்பதை பாதிப்பது மட்டுமல்லாமல், கர்ப்பத்தை பராமரிப்பதைக் கடினமாக மாற்றும். மேலும், பிறப்பு குறைபாடுகள் அதிகரிக்கும் அபாயமும் ஏற்படலாம். எனவே, ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி, உங்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்.

 

 

Related Posts

Leave a Comment