ஆண் மக்களே! “அந்த” பிரச்சனையால் கவலைபடுறீங்களா?

by Lankan Editor

உலகில் மக்களால் அதிகம் சாப்பிடப்படும் ஓர் பழம் தான் வாழைப்பழம். அந்த வாழைப்பழத்தில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

சிவப்பு வாழைப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம். இந்த சிவப்பு நிற வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சிவப்பு வாழைப்பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே சிவப்பு வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை இப்போது தெரிந்து கொள்வோம்.

சரும பிரச்சனைகளை குணப்படுத்தலாம்: இந்த சிவப்பு நிற வாழைப்பழங்களை சாப்பிடுவதால் தோல் சிவத்தல், வறட்சி, சொறி, சொரியாசிஸ் போன்ற பல சரும பிரச்சனைகள் குணமாகும். எனவே உங்களுக்கு ஏதேனும் தோல் பிரச்சனை இருந்தால் சிவப்பு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

கண் பார்வையை மேம்படுத்துகிறது: இன்றைய இளைஞர்கள் பெரியவர்களை விட கண் பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிவப்பு வாழைப்பழத்தை உட்கொள்வது கண் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி வாழைப்பழம் சாப்பிட்டால் குழந்தையின்மை பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

கருவுறுதல் பிரச்சனைக்கான சிகிச்சை: பலர் கருவுறுதல்  பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் இந்த வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இனப்பெருக்க அமைப்பு ஆரோக்கியமாக இருப்பதோடு, கருவுறுதல் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, விறைப்புத்தன்மை பிரச்சனையும் நீங்கி.. பாலுறவு சக்தி அதிகரிக்கிறது.

நரம்பியல் கோளாறுகளை குறைக்கிறது: சிவப்பு வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன. நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகள் நீங்கும்.

சிறுநீரக கல் பிரச்சனைக்கான சிகிச்சை: சிவப்பு வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சனை குறைகிறது.

உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடலில் இரத்தணுக்களின் அளவை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். அதற்கு செவ்வாழை மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.

எடையைக் குறைத்தல் பொதுவாக எடையைக் குறைக்க நினைப்போர் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை எடுக்கக்கூடாது. செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்

Related Posts

Leave a Comment