பெண்ணின் மனதை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று ஆண்கள் சலிப்பாக கூறுவதொன்றும் புதிதல்ல. ஆனால், அதே ஆண்களிடம் பெண்ணின் உடலையாவது முழுமையாக புரிந்து கொண்டீர்களா என்று கேளுங்கள். அவர்கள் ஆம் என்று பதில் அளித்தாலும், நிச்சயம் அது தவறானதாகவே இருக்கும்.
பொதுவாக ஒரு ஆணும், பெண்ணும் முன் விளையாட்டுகளுடன் தாம்பத்ய உறவை தொடங்கி 15 முதல் 40 நிமிடங்கள் கழித்து தான் பெண்ணுக்கு முழுமையான உச்சகட்டம் நிகழுகிறது. ஆனால், இதில் சோகத்திற்கு உரிய விஷயம் என்னவென்றால் பெண்கள் இந்த நிலையை அடையும் முன்பாகவே பல ஆண்கள் தங்கள் விளையாட்டை முடித்துக் கொள்கின்றனர்.
பெண்கள் ஆவேசப்பட கூடாது : பெண்களுக்கு உச்சகட்டத்தை தூண்ட வேண்டும் என்றால் முதலில் அவர்கள் ஆவேசப்படுவதை நீங்கள் நிறுத்த வேண்டும். பெண்கள் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். இன்று இன்பம் பெறுவதற்கு முழு இரவும் இருக்கிறது என்று கூறி, பெண் மீது நீங்கள் எந்த அளவு காதல் கொண்டுள்ளீர்கள் என்பதை விவரித்து சொல்லுங்கள். இதன் மூலமாக இன்பத்தை அவர்கள் உணர தொடங்குவார்கள்.
முன் தயாரிப்புகள் அவசியம் : ஆணும், பெண்ணும் உடல் ரீதியாக நெருங்கும் அந்த நொடிதான் தாம்பத்யம் தொடங்குகிறது என்று அர்த்தம் அல்ல. வெகு முன்னதாகவே பெண்ணின் மனதை ஈர்க்க முயற்சிக்க வேண்டும். ரொமாண்டிக் பாடல், மங்கலான விளக்கு வெளிச்சம், பிடித்தமான ஸ்நாக்ஸ், நகைச்சுவை போன்றவை மூலமாக பெண்ணின் மனதை உங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டும்.
கிசுகிசுவென பேசலாம் : உடல்மொழி பேச தொடங்கிய பிறகு, வாய்மொழிக்கு வேலையில்லை என்று நினைத்து விடாதீர்கள். பெண்ணை அணுகும் அதே சமயம் கிசுகிசுப்பாக காதல் கவிதை, வசனங்களை சொல்வது, நீங்கள் எந்த அளவுக்கு காதலை உணருகிறீர்கள் என்று எடுத்துரைப்பது போன்றவை அவர்களது மனதிலும் இன்பத்தை ஏற்படுத்தும்.
மெதுவாக தொடங்கவும் : நீங்கள் பெண்ணின் ஒவ்வொரு உடல் பாகத்தை தொடும்போதும், அதற்கான எதிர்வினையை அவர்களது முகத்தில் பார்க்கலாம். உங்களுடைய எந்த செயல்பாடு பெண்களுக்கு மிகுந்த கிரக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கவனிக்கவும். குறிப்பாக, அவசரம் காட்டாமல், மெதுவாக செயல்படவும்.
வாய்வழி புணர்ச்சி : பெண்ணின் இடை, இடுப்பு உள்ளிட்ட அந்தரங்க பகுதிகளில் முத்தமிடுவதும், உதடுகளால் வருடுவதும் அவர்களுக்கு மிகுந்த உணர்ச்சியை தூண்டும். வாய்வழி புணர்ச்சி இரு தரப்பிலுமே பரவசத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும். அதே சமயம், பாலுறவுக்கு முன்னதாக உடல் உறுப்புகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பாலுறவின் போதும், வாய்வழி புணர்ச்சியின்போதும் பெண்களின் முனகல்கள் மற்றும் அசைவுகளை ஆழமாக கண்காணித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.