90
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மொழிகள் பல இருப்பினும் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே சிந்தனை எனும் சிற்பத்தை செதுக்கி ஒருவரின் அறிவாற்றலை பெருக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் உலக தாய்மொழிகள் தினம் இன்று.
தாய்மொழியாம் தமிழ் மொழியை காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவில் கொள்வதோடு, நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.