தூத்துக்குடியில் கடல் திடீரென உள்வாங்கியதால் மக்கள் அச்சம் !

by Lifestyle Editor

மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடியில் கடல் சுமார் 30 அடி நீளத்திற்கு உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் வானம் மேகமூட்டத்துடனும், பலத்த காற்று வீசிய வண்ணமும் இருந்து வருகிறது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. குறிப்பாக மாமல்லபுரத்தில் கடல் சுமார் 10 அடி உயரம் வரை கொந்தளித்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோல் சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

இந்த நிலையில், வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடியில் நேற்றும், இன்றும் கடல் சீற்றமாக காணப்படுகிறது. மேலும் கடலில் 3 அடி உயரத்துக்கு அலைகள் சீறி எழுந்தது. இதனிடையே தூத்துக்குடி பீச் ரோடு கடற்கரை பகுதியில் சுமார் 30 அடி நீளம் கடல் உள்வாங்கியது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கியதுதால் அப்பகுதியில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீன்வளத்துறை அறிவுறுத்தியதன்பேரில் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை .

Related Posts

Leave a Comment