இனியாவின் காதல் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டும் எழில்…

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.

ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.

இரண்டு சீரியல்கள் மகா சங்கமத்தில் இணைந்து முடிந்த நிலையில், தற்போது பழைய கதையை மீண்டும் தொடர்கின்றனர்.

இதில் செழியன், எழில் வாழ்க்கை பிரச்சினை என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், தற்போது கொமடியான நிகழ்வினை ப்ரொமோவாக வெளிக்காட்டியுள்ளனர்.

இனியா காதலித்தால் அதற்கு எழில் சப்போர்ட்டாக இருப்பதாகவும், ஆனால் அதற்கு இரண்டு கண்டிஷனையும் போட்டுள்ளார். இதற்கு இனியா ஒருவழியாக காதல் திருமணம் வேண்டாம் என்றும் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார்.

தற்போது பாக்கியாவிற்கு பிரச்சினை கொடுக்காத பிள்ளை என்றால் அது இனியா தான். ஒருவேளை இனியா இவ்வாறு கூறிவிட்டு காதலில் விழுந்துவிடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment