மிருதுவான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு..

by Lifestyle Editor

மிருதுவான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு பல்வேறு கண்டிஷனர்கள் கடைகளில் கிடைத்தாலும் இயற்கையை போல் வராது. ஏனெனில் இவை கூந்தலை நீரேற்றமாக வைத்திருக்க செய்யும். அப்படியான இயற்கை பொருள்களில் கற்றாழை மற்றும் ஆளிவிதைகள் இரண்டையும் சேர்த்து செய்யும் ஹேர் மாஸ்க் முடிக்கு பளபளப்பை சேர்ப்பதுடன் ஊட்டமும் அளிக்கும். மேலும் கூந்தல் பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவும். மென்மையான வலுவான கூந்தலை பெறுவதற்கு நீங்கள் சோற்று கற்றாழை மற்றும் ஆளிவிதை இரண்டையும் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

தேவை :

ஆளி விதைகள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
கற்றாழை ஜெல் – 3 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 3 துளி

என்ன செய்வது :

ஒரு சிறிய பான் பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் ஆள்விதைகள் சேர்க்கவும். இதை மெதுவாக சூடேற்றவும்.

ஒட்டாமல் இருக்க அதை அடிக்கடி கிளறிவிடவும்.

தண்ணீர் ஆளிவிதையுடன் சேர்ந்து ஜெல் ஆக மாறும் போது அடுப்பை அணைக்கவும்.

பிறகு ஒரு மணி நேரம் வைத்திருந்து கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலக்கவும்.

பிறகு ஜெல் மற்றும் திரவத்தை பருத்தி துணி வழியாக வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றிவிடவும்.

தலைமுடியை நீரில் அலசி முடியை நன்றாக பகுதி பகுதியாக பிரித்து கொள்ளவும்.

விரல் நுனிகள் அல்லது தூரிகையை பயன்படுத்தி ஹெர் மாஸ்க் எடுத்து முடியின் வேர்கள் முதல் நுனி வரை தடவி விடவும்.

இரத்த ஓட்டம் தூண்டுவதற்கு முடியை மென்மையாக மசாஜ் செய்யவும்.

இந்த கண்டிஷனர் கூந்தல் முழுவதும் பரவியிருக்க தலைமுடி முழுவதும் சீப்பு கொண்டு சீவுங்கள்.

தலைமுடியை வெதுவெதுப்பான துண்டில் போர்த்தி கொள்ளல் அல்லது ஷவர் கேப் கொண்டு பயன்படுத்தி தலைமுடியை மூடி வைக்கலாம்.

பிறகு 20-30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும்.

பிறகு கூந்தலை மென்மையாக மந்தமான நீரில் கழுவி விடவும்.
இதை வாரம் ஒருமுறை பயன்படுத்தவும்.

Related Posts

Leave a Comment