காதலை வெளிபடுத்த ஒவ்வொரு நிறத்தில் டெடி பொம்மை..

by Lifestyle Editor

பிப்ரவரி மாதம் முழுவதுமே காதல் மாதமாக அனுசரிக்கப்பட்டாலும், 7 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை உள்ள 7 நாட்கள் மிக மிக சிறப்பானவை. அதிலும் பரிசுகள் கொடுக்கும் நாட்கள் இன்னும் மகிழ்ச்சிகரமான நாட்களாக அமைகிறது. பொதுவாகவே பெண்களுக்கு டெடிபேர் பொம்மைகள் மிகவும் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. சிறுமிகள் முதல் இளம் பெண்கள் வரை டெடிபேர் பொம்மையை மிகவும் விரும்புவார்கள். காதலிகளுக்கு டெடிபேர் பரிசாக கொடுப்பது ரொமான்ஸின் இன்னொரு அடையாளமாக கருதப்படுகிறது.

டெடிபேர் பொம்மை என்பது ரொமான்டிக்காக இருப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் பார்ட்னரை ஸ்பெஷலாகவும் உணர செய்யும். நம் அனைவருக்குமே இளம் வயது குழந்தை பருவத்தில் இருந்தே டெடிபேர் பொம்மைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

கையளவு பொம்மைகள் முதல் மனிதர்களை விட மிகப்பெரிய அளவிலான பொம்மைகள் வரை பல அளவில் டெடிபேர் பொம்மைகள் உள்ளன. பல்வேறு வண்ணங்களில், அளவுகளில் கிடைக்கும் டெடிபேர் பொம்மை சிலருக்கு மிக மிக நெருங்கிய நண்பனாக பல ஆண்டு காலம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சரி, டெடி தினத்தன்று என்ன நிறத்தில் டெடியை பரிசாகக் கொடுக்கலாம் என்று இங்கே பார்க்கலாம்.

காதலர் தினம் கொண்டாட்டத்தில், டெடி தினத்தன்று சிகப்பு நிற டெடி பேர் பொம்மையை காதலன் அல்லது காதலிக்கு பரிசாக வழங்கலாம். நீங்கள் காதலை தீவிரமாக நேசிக்கிறீர்கள் மற்றும் உங்கள் இருவருக்கும் உணர்ச்சி பூர்வமான ஒரு பிணைப்பு இருக்கிறது என்பதை குறிக்கிறது.

ஆரஞ்சு நிற டெடிபேர் என்பது எனர்ஜி மற்றும் அளவில்லாத மகிழ்ச்சியை குறிக்கிறது. ஆரஞ்சு பொம்மையை பரிசாக கொடுப்பது என்பது விரைவில் காதலை உங்களிடம் சொல்ல போகிறார் என்று அர்த்தமாகும். எனவே ரொமான்டிக்கான ஒரு பிரோபோசலுக்குத் தயாராக இருக்கவும்.

காதலுடன் நீல நிறம் பொதுவாகவே பொருந்தாது. ஆனால் நீல நிறத்தில் டெடிபேர் பரிசாக கொடுப்பது என்பது உங்கள் மீது அளவில்லாத அன்பை வைத்திருப்பதை உணர்த்தும். அது மட்டுமில்லாமல் காதலில் அதிர்ஷ்டம் செய்வதாக உணர்ந்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவதாகும்.

வெள்ளை நிற டெடி பேரை கொடுப்பது என்பது நல்ல அறிகுறி கிடையாது. வெள்ளை பொம்மை கொடுப்பது என்பது காதலில் விருப்பமில்லை அல்லது ஏற்கனவே வேறு ஒருவரை நேசிக்கிறேன் என்ற அர்த்தத்தை குறிக்கும்.

பழுப்பு நிற டெடிபேர் என்பது இதயம் உடைந்து போயிருக்கிறது என்பதை சொல்லும்.

Related Posts

Leave a Comment