எதிர்த்து யாருமே போட்டியில்லை.. ஆனாலும் தோல்வி.. வித்தியாசமான தேர்தல்..!

by Lifestyle Editor

அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் எதிர்த்து யாருமே போட்டியிடாத நிலையில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் போட்டியிட்ட நிலையில் அந்த வேட்பாளரும் தோல்வி அடைந்த ருசிகர சம்பவம் தற்போது நடந்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது அதிபராக இருக்கும் ஜோபைடனின் பதவிக்காலம் இந்த ஆண்டு பதவி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிட ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்

அமெரிக்காவை பொறுத்தவரை ஒவ்வொரு மாகாணத்திலும் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கட்சி உறுப்பினர்களிடையே நடக்கும் .அந்த வகையில் நேற்று நெவாடா மாகாணத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது.

அதில் தொழில்நுட்ப காரணங்களால் டிரம்ப் பெயர் இடம் பெறவில்லை, எனவே அவரை எதிர்த்து போட்டியிட்ட நிக்கி ஹாலே என்பவரின் பெயர் மட்டுமே இருந்தது .எனவே அவருக்கு தான் அனைத்தும் வாக்குகளும் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை விட அதிகமாக நம்மூரில் நோட்டா இருப்பது போல் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்ற ஆப்ஷனுக்கு அதிக ஓட்டுகள் விழுந்து உள்ளது.

எனவே நிக்கி ஹாலே தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதால் அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment