அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் நேற்று பிப்ரவரி 6ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று பிப்ரவரி 7ஆம் தேதி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,850-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,792க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,336க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.76.00க்கும் ஒரு கிலோ ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment