சீனாவில் பாரிய மண்சரிவு : 47 பேரைக் காணவில்லை!

by Lifestyle Editor

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று அதிகாலை இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் காணாமல் போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

மேலும், இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவு, அந்த பகுதியில் காணப்படும் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உள்ளூர் நேரப்படி இன்ற அதிகாலை 5.51 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவில் சுமார் 18 வீடுகள் புதையுண்டுள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இந்த அனர்த்ததில் உயிழிழர்நதவர்கள் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக சீனாவில் இயற்கை பேரழிவு சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் உயிரிழந்ததாக ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஓகஸ்ட் மாதம் சியான் நகரின் வடக்குப் பகுதியில் கனமழை காரணமாக 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment