அதிரடியாக குறைந்த தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் 46,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,960க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,870க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.78.30க்கும், கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து ரூ.78,300க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,850 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 78 ரூபாய்க்கும், கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து 78,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment