பள்ளி சீருடையுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பெண்…

by Lifestyle Editor

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 91 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன் என 16 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது 91 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டியினை பூர்ணிமா எடுத்துச் சென்றுள்ளார். தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சின்ன மருமகள் சீரியலின் ப்ரொமோ காட்சியினை பிக்பாஸில் வெளியிடுவதற்கு குறித்த சீரியலில் நடித்த நடிகர், நடிகை உள்ளே வந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment