தங்கம் விலை அதிரடி குறைவு..

by Lifestyle Editor

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.47,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்ட்டாத்தையொட்டி, வார முதல் நாளான திங்கட்கிழமை, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 47 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ரூ.47,280-க்க விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 5,910 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.70-க்கும் ஒரு கிலோ வெள்ளி 79 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment