பிக்பாஸ் வீட்டை விட்டு பாதியிலேயே வெளியேற்றப்பட்ட ரவீனாவின் குடும்பத்தினர்.!

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், ரெட் கார்டு கொடுக்கபட்டு பிரதீப், அன்ன பாரதி, ஐஷூ, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது Freeze Task நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர். இதனால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும், உற்சாகத்துடனும் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் முதல் ப்ரமோவில் ரவீனாவின் அம்மா மற்றும் தம்பி பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்து ரவீனாவை திட்டி தீர்ப்பது போல் காண்பிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அதில் ரவீனாவின் அம்மா மற்றும் தம்பி இருவரும் வெளியுலக விஷயங்களை பகிர்ந்து கொண்டதாலும், code words பயன்படுத்தியதாலும் உடனடியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரவீனா தேம்பி அழுதுள்ளார். இந்த ப்ரமோ வீடியோ வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment