இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது!

by Lifestyle Editor

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடயிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடரின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். டெஸ்ட் தொடரின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கிறார். இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், அட்டுத்த இரு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் அந்த தொடர் சமனில் முடிந்தது. இதனையடுத்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடயிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. தென் ஆப்ரிக்காவில் உள்ள போலந்து பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment