U19CWC22; ஒரு போட்டியில் கூட தோற்காமல் உலககோப்பையை வென்ற இந்திய அணி! குவியும் வாழ்த்துக்கள்;

by Column Editor

இந்திய அணி U19 உலகக்கோப்பையை வென்று சாதித்தது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்திய U19 உலககோப்பை 2022 கிரிக்கெட் தொடர் கடந்த ஜனவரி 14-ம் தேதியன்று துவங்கியது. 14-வது முறையாக நடைபெறும் இந்த உலககோப்பை போட்டியில், நடப்பு சாம்பியன் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட உலகின் டாப் 16 அணிகள் பங்கு பெற்றன.

இறுதியில் போட்டி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் பெத்தேல் 2 ரன்கள், டாம் பிரெஸ்ட் 0 ரன்கள் என சொற்ப ரன்களில் இந்தியாவின் ரவிக்குமார் பந்தில் அவுட்டானார்கள்.

இதனால், மோசமான ஆட்டத்தை தொடர்ந்ததால், அணியை காப்பாற்ற போராடிய ஜேம்ஸ் ரெவ் 116 பந்துகளில் 95 ரன்கள் எடுத்த போதிலும் இதர இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

இதனால் 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து வெறும் 189 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அதிரடியாக பந்துவீசிய ராஜ் பாவா 5 விக்கெட்டுகளும் ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 190 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர் அங்கிரிஸ் ரகுவன்ஷி முதல் ஒவேரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

ஆனாலும், மிடில் ஆர்டரில் ஷைக் ரசீத் 50 ரன்களும் மற்றும் ராஜ் பாவா 35 ரன்களும் எடுத்து இந்தியாவை சரிவில் இருந்து மீட்க இறுதியில் நிஷாந்த் சித்து 50* ரன்களும் தினேஷ் பானா வெறும் 5 பந்தில் 13* ரன்களும் விளாசி அபார பினிஷிங் செய்ததால் 47.5 ஓவர்களில் 6 விக்கெட் இழந்த இந்தியா 195 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

மேலும், இந்த உலக கோப்பை துவங்கியது முதல் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளில் அசத்திய இந்திய அணி பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும், தோல்வியே தழுவாமல் வெற்றிகளைப் பெற்று இறுதிப் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்தது 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. மேலும், உலகின் மற்ற எந்த அணியும் இந்த உலகக்கோப்பையை 3 முறைக்கு மேல் வென்றது கிடையாது என்பது இந்திய ரசிகர்களை பெருமை அடைய வைக்கும் அம்சமாகும்.

Related Posts

Leave a Comment