சீனாவில் சக்திவாய்ந்த பூகம்பம்; 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

by Lifestyle Editor

சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கன்சு மாகாணத்தில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கிங்காய் மாகாணத்திலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கமானது 6.2 என்ற ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் இதனால் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும், பாரிய அளவில் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment