கூட்டணியை பிரித்த விசித்திரா.. கடுப்பில் மாயா

by Column Editor

மாயா – பூர்ணிமா இருவரும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை என விசித்திரா ஓபனாக பேசியுள்ளார்.

பிக்பாஸ்

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ்,யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் வீட்டிற்குள்ளே பல மாற்றங்களை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் கூல் சுரேஷ் மற்றும் அனன்யா ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கூட்டணியை பிரித்த விசித்திரா

இந்த நிலையில் இன்றைய தினம் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் வழமைக்கு மாறாக மாயா – பூர்ணிமா இருவரும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்காக தெரிவாகியுள்ளனர்.

இப்படி இருவரும் சேர்ந்திருப்பதை பொறுத்து கொள்ள முடியாத விசித்திரா இருவரின் கூட்டணிக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் சண்டை முற்றிய நிலையில், மாயா – பூர்ணிமாவை பார்த்து, “ என்னிடம் பேச வேண்டாம்” என கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ முடிவடைந்துள்ளது.

Related Posts

Leave a Comment