தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தம்

by Column Editor

கனமழை காரணமாக தூத்துக்குடியில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

தென் இலங்கை பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று(டிச.18) பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக தூத்துக்குடியில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதன் எதிரொலியால் தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானம் நண்பகல் 12.30 மணி வரை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment