பிக்பாஸ் வீட்டில் 76 நாட்களை நிறைவு செய்த கூல் சுரேஷ்… சம்பளம் எவ்வளவு தெரியமா?

by Column Editor

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து கூல் சுரேஷ் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த வீட்டில் இருந்த போது வாங்கிய சம்பளம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.

கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது.

எப்போதும், மக்களுக்கு ஓரளவிற்கு நன்கு தெரிந்த முகங்களை பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுத்தனர். ஆனால், இந்த சீசனில் பெரிய திரையில் மட்டுமன்றி சின்னத்திரை மற்றும் டிஜிட்டல் திரை முகங்களையும் தேர்ந்தெடுத்தனர்.

இந்த சீசனில், ஆரம்பத்தில் இருந்தே ட்விஸ்டிற்கு மேல் ட்விஸ்ட் வந்து கொண்டிருந்தது. ஒரே வீடாக இருந்த பிக்பாஸ் வீடு, இரண்டாக பிரிந்தது. டபுள் எவிக்ஷன், இரண்டு வைல்டு கார்டு என யாரும் எதிர்பாராத ட்விஸ்டுகளும் இப்போட்டியில் இருந்தது.இந்த நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைப்பெற்றது. மிட்-வீக் எவிக்ஷன் என்ற பெயரில், இந்த வாரத்தின் நடுவிலேயே அனன்யா வெளியேற்றப்பட்டார். இவர், ஏற்கனவே பிக்பாஸ் போட்டியில் ஒரு வாரம் இருந்தார்.

பின்னர், 1 வாரத்தில் எவிக்ட் செய்யப்பட்டு மீண்டும் வைல்டு கார்டு மூலம் உள்நுழைந்தார். இவரையடுத்து, நடிகர் கூல் சுரேஷும் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் கூல் சுரேஷ்

நடிகர் கூல் சுரேஷ், பிக்பாஸ் போட்டியில் சர்ப்ரைஸான போட்டியாளராக உள்நுழைந்தார். ஆரம்பத்தில் கேம் புரியாமல் இருந்த இவர், அதன் பிறகு நன்றாகவே விளையாட ஆரம்பித்தார். கடந்த ஒரு வார காலமாக வீட்டிற்கு போக வேண்டும் என்றும், இங்கிருக்கவே பிடிக்கவில்லை என்றும் பேசினார்.

சில நாட்களுக்கு முன்பு, சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றார். இதையடுத்து, அவரை பிக்பாஸ் அழைத்து சமாதானம் செய்தார். இந்த வாரம் கூல் சுரேஷ் எவிக்ட் ஆகியிருப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அக்டோபர் 1 முதல் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கூல் சுரேஷ் 10 வாரங்கள் வீட்டில் அதாவது 75 நாட்களுக்கு மேல் இருந்துள்ளார். வாரத்திற்கு ரூ. 1.5 லட்சம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றவர் ரூ. 15 லட்சம் வரை சம்பளம் பெறுவார் என குறிப்பிடப்படுகின்றது.

Related Posts

Leave a Comment