மிட் வீக் எவிக்ஷனுக்கு பின் பிக்பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்..

by Lifestyle Editor

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ்,யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் வீட்டிற்குள்ளே பல மாற்றங்களை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் பிரபலத்தின் மகளான ஜோவிகா விஜயகுமார் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிய நிலையில் நேற்று அனன்யா மிட் வீக் எவிக்ஷன் என்ற பெயரில் வெளியேற்றப்பட்டார்.

முதலாவது வாரம் எவிக் செய்யப்பட்ட அனன்யாவிற்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை சரியாக பயன்படுத்தாமல் திடீரென எவிக்ஷனில் வெளியேறி விட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 ன் இன்றைய தினம் 75 ஆவது நாளை கொண்டாடி வருகிறார்கள்.

இன்றிலிருந்து பிக்பாஸ் டாஸ்க்கள் மற்றும் போட்டிகள் கடுமையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த சீசன் முடிய இன்னும் 25 நாட்கள் உள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் இனிப்பு கொடுத்து வாழ்த்து கூறியுள்ளார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment