உடல் எடையை குறைக்க ஈசியான வீட்டு வைத்தியம்..

by Lifestyle Editor

வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை. தேன் மற்றும் பூண்டு சாப்பிடுவதற்கு சுவையாக இல்லாவிட்டாலும், இது உடல் எடை குறைப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கிய மேம்பாடு போன்ற பல்வேறு விதமான பலன்களை தரக்கூடும்.

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள கழிவுகளை அகற்றவும் உதவுகிறது. சொல்லப்போனால் பூண்டுடன் தண்ணீர் சேர்த்து சாப்பிடுவது ஹைப்பர் டென்ஷன், அதிக ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்த உதவக்கூடிய ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்.

உடல் எடையை குறைப்பதை தவிர தேனுடன் பூண்டு சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளி மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு எதிராக போராடவும், செரிமான அமைப்பை வலுப்படுத்தவும், உடலில் உள்ள கழிவுகளை அகற்றவும் திறம்பட செயல்படுகிறது.

பூண்டை பச்சையாக சாப்பிடுவது சமைத்த பூண்டை காட்டிலும் அதிக ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டுள்ளது. அதேபோல காலை எழுந்ததும் தேன் சாப்பிடுவது கொழுப்பை வளர்சிதை மாற்றம் செய்வதற்கு உதவும். தேனில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் கிடையாது. அதோடு இது ஆற்றலின் மூலமாக அமைகிறது.

உடல் எடையை குறைக்க பூண்டு மற்றும் தேனை சாப்பிடுவது எப்படி?

பூண்டை தோல் உரித்து அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் போடவும். அதில் தேவையான அளவு தேன் ஊற்றி நன்றாக குலுக்கவும். பாட்டிலை இறுக்கமாக மூடி தேனில் பூண்டு நன்றாக ஊறுவதை உறுதி செய்யவும். இதிலிருந்து தினமும் ஒன்று எடுத்து காலை வெறும் வயிற்றில் தேனுடன் சேர்த்து சாப்பிடவும். இது சருமத்திற்கும் நன்மை தரக்கூடியதாக அமைகிறது. பூண்டு இயற்கையான ரத்த சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. மேலும் இதில் பாக்டீரியாவை எதிர்த்து போராடக்கூடிய பண்புகளும் உள்ளது.

தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

*கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துகிறது

*ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

*நெஞ்செரிச்சலை தவிர்க்கிறது

*நல்ல தூக்கத்தை வரவழைக்கிறது

*வயிற்றுப் போக்கில் இருந்து நிவாரணம் அளிக்கிறது

*மூளை சேதமடைவதில் இருந்து பாதுகாக்கிறது

*காயங்கள் விரைவாக குணமாவதற்கு உதவுகிறது

தேனை அதிக அளவு சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் :

தேனில் அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கலாம்.

* டைப் 2 நீரழிவு நோய் மற்றும் இதய நோய் ஏற்படலாம்

* குழந்தைகளில் மலச்சிக்கல் உண்டாகலாம்

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

* ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது

* இதய நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது

*அதிக கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கிறது

*ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

*குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது

*சளி மற்றும் இருமலுக்கு எதிராக போராடுகிறது

உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தகுந்தார் போல உணவுகளை பின்பற்றுவதன் மூலமாக எளிமையான மற்றும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.

Related Posts

Leave a Comment