பிக்பாஸ் சீசன் 7: ‘இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது…

by Lifestyle Editor

மக்கள் அதிகம் பார்க்கும் ரியாலிட்டி ஷோவாக உள்ள பிக்பாஸில் இந்த வாரம் புயல் காரணமாக எலிமினேஷன் கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் அதிரடியாக இருந்த நிகழ்ச்சி பிரதீபிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட பின்னர் சற்றும் சுமாரான ஸ்பீடில் போய்கொண்டிருக்கிறது. இந்த வாரம் விசித்ரா, மணி, நிக்சன், தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். நிக்சன் தான் குறைவாக வாக்கில் உள்ளதால் அவர் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் மிக்ஜாம் புயலால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் இல்லை என பிக்பாஸ் கூறியுள்ளார். அதாவது அதிக மக்களால் வாக்களிக்க முடியாத காரணத்தால் ரத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் அடுத்த வாரமும் இதே நாமினேஷன் வைக்க வேண்டும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 3 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இருந்து ஓட்டு போடும் நாங்கள் என்ன சும்மாவா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment